பாட்னா, டிச. 6-

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘பி.கே.’ இந்த படத்தை பார்க்குமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுப்பபேன் என்று அமீர்கான் கூறினார்.
பிரதமரை பி.கே. படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்வேன்: அமீர்கான்
பீகார் மாநிலம் பாட்னாவில் அமீர்கான் நடித்துள்ள பி.கே. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது;-

‘‘இந்த படத்தில் ஏதாவது ஒரு மொழியில் பேசி நடிக்க முடிவு எடுத்தோம். ஆனால், இதில் மெயின் கேரக்டரில் நடிப்பவர் போஜ்பூரி மொழியில் பேசினால்தான் இப்படம் நன்றாக அமையும் என்று நான் தெரிவித்தேன். இந்த படத்தின் ஒருஜினல் ஸ்கிரிப் கரி போலிதான். ஆனால், நான் இறுதியாக போஜ்பூரியை தேர்வு செய்தேன். போஜ்பூரி எனக்கு மிகவும் மிடிக்கும். அதனால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த படம் சிறுவன், இளைஞர்கள் மற்றும் எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும்.

பிரதமர் மோடி எப்போதும் பிஸியாக இருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் இந்த படத்தைப் பார்த்தால் அது சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்படத்தை பார்க்கும்படி அவருக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்’’ என்றார்.

பி.கே. படத்தின் ஆடியோ ரிலீசின் போது சர்ச்கைக்குரிய படத்தை வெளியிட்டு அமீர்கான் வழக்குகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top