அஜீத்தின் ‘‘என்னை அறிந்தால்’’ படத்தின் டீசர் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியானது. இந்த டீசர் வெளியான 48 மணி நேரத்துக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த டீசரை கண்டு ரசித்துள்ளனர்.
பட்டையை கிளப்பும் என்னை அறிந்தால் டீசர்: இரண்டே நாட்களில் 20 லட்சம் பேர் ரசித்தனர்
இந்த டீசரில் அஜீத் இரு கெட்டப்பில் தோன்றுகிறார். ஒரு கெட்டப்பில் வாட்டசாட்டமான இளைஞனாக சிரித்த முகத்துடன் வருகிறார். இன்னொரு கெட்டப்பில் லேசான தாடியுடனும், கையில் துப்பாக்கியுடனும் ஆவேச முகம் காட்டுகிறார். துப்பாக்கியால் யாரையோ குறி வைக்கவும் செய்கிறார். கதையை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு டீசர் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். அஜீத் கெட்டப் பிரமாதமாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

அந்த டீசரில்... ஒரு மெல்லிசான கோடு... கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன்.. அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன்... இந்த பக்கமா, அந்த பக்கமான்னு முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துச்சு, வாழ்க்கைல ஒருநாள்... என்னை அறிந்தால்... என்று அஜீத் பேசும் பஞ்ச் வசனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இன்று (6-12-2014) இரவு சுமார் 8 மணி நிலவரப்படி, ‘‘என்னை அறிந்தால்’’ படத்தின் டீசரை சுமார் 22 லட்சத்து 75 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top