அகமதாபாத், டிச.6-

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் நீரின்றி வற்றிக்கிடந்த ஆற்றுக்குள் இன்று லாரி பாய்ந்த விபத்தில் 7 பெண்கள், 1 குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர்.
வறண்ட ஆற்றுக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 10 பேர் பரிதாப பலி
சமையல் ஒப்பந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு லாரி தாரி-அம்ரேலி சாலையில் இன்று சமையல் பாத்திரங்கள் மற்றும் பணியாட்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்தது. கவாட்கா கிராமம் அருகே ஷெட்ருஞ்சி ஆற்றுப்பாலத்தின் வழியாக அந்த லாரி வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு வறண்டுக்கிடந்த ஆற்றுக்குள் லாரி பாய்ந்தது.

இந்த விபத்தில் 7 பெண்கள், 1 குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர். லாரிக்குள் இருந்த மிகப்பெரிய சமையல் பாத்திரங்கள், கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் போன்ற கனமான பொருட்கள் லாரியில் வந்தவர்களின் மீது விழுந்ததால் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு பலி எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக விபத்தை நேரில் பார்த்த சிலர் கருத்து தெரிவித்தனர். காயமடைந்த மேலும் 5 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top