மும்பை, டிச. 6-

உலக அளவில் பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மும்பையைச் சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றான்.
உலக பள்ளிகள் செஸ்: மும்பை சிறுவன் சாம்பியன்
பிரேசில் நாட்டின் ஜுயிஸ் டி போரா நகரில் நடைபெற்ற உலக பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில், 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் திருபாய் அம்பானி பள்ளி மாணவன் தேவ் ஷா (வயது 7) சாம்பியன் பட்டம் வென்றான்.

தெற்கு மும்பை செஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த தேவ் ஷா, இறுதிச்சுற்றில் 7.5 புள்ளிகளை பெற்று ஆட்டத்தை டை செய்தான். ஆனால், ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் தேவ் ஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டான்.

மேலும் இந்த வெற்றியின் மூலம், அவருக்கு கேண்டிடேட் மாஸ்டர் என்ற தகுதியை உலக செஸ் சம்மேளனம் வழங்கியுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top