புதுடெல்லி, டிச. 5-

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டோனி. இவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்ததுடன், தனது புதுமையான சிகை அலங்காரத்தாலும் ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார்.
ஆஸி. தொடரில் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் தோன்றும் டோனி
2004-ம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிரான சர்வதேச போட்டியில் டோனி அறிமுகமானார். அப்போது நீண்ட முடி வளர்த்து சிகை அலங்காரத்துடன் தோன்றினார். அந்த போட்டியில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினாலும், அவரது விக்கெட் கீப்பிங் பணி மற்றும் அவரது சிகை அலங்காரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதன்பின் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார். பாகிஸ்தான் தொடரின்போது முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இவரது சிகை அலங்காரத்தை பெரிதும் பாரட்டினார்.

அவரது அந்த சிகை அலங்காரத்தை பார்த்து இந்தியாவில் உள்ள ஏராளமான ரசிகர்கள் அதே மாதிரி சிகை அலங்காரம் செய்யத் தொடங்கினார். ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன், முடியை சீராக வெட்டி ஸ்டைலை மாற்றிக்கொண்டார்.

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் டோனி கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கியூக்ஸ் பந்து தாக்கி இறந்த காரணத்தில் ஆட்டம் 4-ந்தேதியில் இருந்து 9-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், முதல் போட்டியில் அவர் கலந்து கொள்கிறார்.

இதற்காக தனது சிகை அலங்காரத்தை வித்தியாசமாக செதுக்கியுள்ளார். டோனியின் தனிப்பட்ட சிகை அலங்காரம் செய்பவரும், டோனியின் நண்பருமான சப்னா பவ்னானி அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

43 வயதாகும் இவர்தான் டோனிக்கு வித்தியாசமான சிகை அலங்காரம் செய்யக்கூடியவர். இவர் டோனிக்கு சிகை அலங்காரம் செய்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த சிகை அலங்காரத்திற்கு ‘ஹை அண்டு டைட்’ அல்லது ‘ஜார்ஹெட்’ என்று பெயர். இதன் மூலம் டோனியின் பின்பக்கம், இரு காதுகளின் ஓரம் ஷேவ் செய்யப்பட்டு தலையின் மத்தியில் மட்டும் முடி நீண்டிருக்கும். ‘ஹை அண்டு டைட்’ கட்டிங் பெரும்பாலும் ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகள் செய்துகொள்வார்கள். அமெரிக்காவின் கப்பற்படை அதிகாரிகள் இதுபோன்றுதான் சிகை அலங்காரம் செய்திருப்பார்கள்.

டோனியின் இந்த சிகை அலங்காரம் ரசிகர்களை கவருமா? என்று பார்ப்போம்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top