செவ்வாய் கிழமை தொடங்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோனி கேப்டனாக செயல்பட வாய்ப்பிருப்பதாக தொடக்க வீரர் ஷிகர் தவன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவதாக ஷிகர் தவன் நம்பிக்கை. | கோப்புப் படம்.
"விராட், தோனி இருவருமே ஆக்ரோஷமான கேப்டன்கள். ஆனாலு நிச்சயமான வித்தியாசம் உள்ளது. விராட் கோலி களத்தில் கூடுதல் உயிர்ப்புடன் செயல்படுவார். இருவரின் கேப்டன்சியில் விளையாடுவதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. எனினும் இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமையேற்று நடத்த இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கலாம், ஏனெனில் தோனி இங்கு வந்துவிட்டார்” என்றார்.

அதன் பிறகு ஆஸ்திரேலிய பந்து வீச்சு மற்றும் இந்த தொடர் பற்றி அவர் கூறும் போது,

“ஜான்சன் தற்போது உலகின் தலைசிறந்த வீச்சாளர்களில் ஒருவர். அவரிடம் ஒரு ஆக்ரோஷமான வேகம் உள்ளது. ஆனாலும் நாங்கள் அந்த வேகத்தை எதிர்கொள்ள பயிற்சியை நன்றாகவே செய்துள்ளோம். இந்தியாவில் இவரை நிறைய முறை எதிர்கொண்டுள்ளேன், சர்வதேச போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என்று இவரை எதிர்கொண்டுள்ளேன். ஆஸ்திரேலியாவில் அவரை இப்போதுதான் எதிர்கொள்ளவிருக்கிறேன், எனவே இது ஒரு மிகப்பெரிய சவால். அவரை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வேன் என்றே கருதுகிறேன்.

ஆக்ரோஷமான ஒரு தொடக்க வீரர் அவசியம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் கூறவில்லை, மாறாக, பொதுவாகவே அது எந்த அணிக்கும் நல்லது.

நான் நம் அணிக்காக அந்த ரோலை செய்ய விரும்புகிறேன். நான் இதில் வெற்றிபெற்று விட்டால் இந்திய அணிக்கு மிகவும் நல்லது. 

நான் எனது தோல்விகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அது என்னை மேலும் மெருகடையச் செய்திருக்கிறது. கணினி, பயிற்சியாளர்கள் என்று ஆலோசனை செய்து எனது ஆட்டத்தை பரிசீலனை செய்து வருகிறேன். 

இந்தியாவுக்காக இது எனது முதல் ஆஸ்திரேலிய பயணம். ஆனால் இந்தியா ஏ அணிக்காக இங்கு ஏற்கெனவே ஆடியுள்ளேன். பிரிஸ்பன் மைதானத்தில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். 

எனது மனைவி, குழந்தைகள் இங்கு மெல்பர்னில் இருக்கிறார்கள். அதனால் நான் அடிக்கடி ஆஸ்திரேலியாவுக்கு வருவேன். இது எனக்கு அலுப்பூட்டுகிறது. ஒவ்வொரு முறை குடும்பத்தைப் பார்க்க 13 அல்லது 14 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. என் நாட்டிலிருந்து இது வெகுதூரம் உள்ளது. 

இந்தத் தொடரில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை நல்ல உணர்வுடன் ஆட வேண்டும் என்பதே எனது திட்டம்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top