கோவை, டிச.8-

கோவை நகரத்தின் சாலைகளில் பிச்சை எடுத்து திரிந்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 12 பேருக்கு இங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலை வாங்கித்தந்து கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உதவி செய்துள்ளார்.
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 பேருக்கு கல்லூரியில் வேலை: கோவை கலெக்டர் ஏற்பாடு
கோவை நகரத்தின் சாலைகளில் பிச்சை எடுத்து திரிந்துக் கொண்டிருந்த இவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு புனர்வாழ்வு மையத்தில் பாத்திரம் கழுவுதல், இடங்களை பெருக்கி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட தொழில்சாரா பயிற்சிகள் சுமார் ஒருவார காலம் அளிக்கப்பட்டன.

மேலும், மனவளக்கலை மற்றும் மருத்துவத்தின் மூலமாக அவர்களின் மனப்பாங்கை மாற்றி, இங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலையும் வாங்கித்தந்து கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உதவி செய்துள்ளார்.

குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் இவர்கள் 12 பேருக்கும் வேலை வழங்கும்படி மாவட்ட கலெக்டர் செய்த சிபாரிசை ஏற்று இந்த கல்லூரி நிர்வாகம் இவர்களுக்கு தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை வழங்கியுள்ளது.

மற்றவர்களைப் போல் இவர்களும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அக்கறை செலுத்திய மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் வேலை அளித்த ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் நிர்வாகிகள் ஆகியோரை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பிரபல தொழில் நிறுவனங்களும் முயற்சித்தால் இன்னும் ஏராளமான பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் நிச்சயமாக பல ஒளி விளக்குகளை ஏற்றிவைக்க முடியும்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top