பெர்க்லி, டிச.8-

கடந்த ஆகஸ்ட் 9 அன்று 18 வயதான மைக்கேல் பிரௌன், ஜூலை 17 அன்று கறுப்பரான 63 வயது எரிக் கார்னர், என்று அமெரிக்கக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின மக்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. காவல்துறையின் இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக அந்நாட்டில் நடத்தப்படும் நாடு தழுவிய போராட்டம் ஐந்தாம் நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. 
அமெரிக்காவில் காவல்துறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சு-கண்ணீர் புகை குண்டு வீச்சு
இந்நிலையில் நேற்றிரவு மேற்கு கடற்கரை நகரங்களான சியாட்டில் மற்றும் பெர்க்லியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த மோதலில் ஜன்னல்கள், காவல்துறை வாகனங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கொலை செய்த காவல் அதிகாரி எந்த தண்டனையும் இன்றி விடுதலை செய்யப்படும் வரை அமைதியாக நடந்து வந்த இரவு ஆர்ப்பாட்டங்கள், விடுதலை செய்யப்பட்டதாக வெளியான அறிவிப்புக்கு பின்னர் வன்முறை பாதைக்கு திரும்பியது. 1960 முதலே எதிர்ப்பு இயக்கங்களின் தாயகமாக இருக்கும் சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு அருகிலுள்ள பெர்க்லியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் வன்முறையில் இறங்கினர். ஒரு மனிதர் ஒரு கடையின் ஜன்னலை தன் ஸ்கேட்டிங் போர்டால் உடைத்து கடை கொள்ளை போக காரணமாகயிருந்தார்.

இந்நிலையில் ஜூலை மாத சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும், எரிக் கார்னர் வழக்கில் காவல் துறையினர் மீது தவறு இருந்ததா என நான்கு மாதங்களில் விசாரித்து முடிவு செய்யப்படும் என்றும் நியூயார்க் காவல் ஆணையர் பில் பிராட்டன் தெரிவித்தார். இதனிடையே சியாட்டில் நகரத்தில் அணிவகுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், ஏழு பேரைக் கைது செய்தனர். சனிக்கிழமை இரவு வரை ஒழுங்கற்ற நடத்தையின் காரணமாக 300 பேரை காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top