பீஜிங், டிச. 8-

சீனாவில் நடந்த பயங்கர தாக்குதல்களில் தொடர்புடைய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பயங்கர தாக்குதல் நடத்திய வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை
சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் ஜி ஜின்பிங், ஜின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தலைநகர் உரும்கி ரெயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயணிகளை கத்திகளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 79 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னர் மே மாதம் மார்க்கெட் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சீன அரசை உலுக்கிய இந்த இரட்டைத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய உரும்கி நீதிமன்றம், 8 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. மேலும், இரு வழக்குகளிலும் தொடர்புடைய 5 பேரின் மரண தண்டனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top