புதுடெல்லி, டிச.8- 

கூடங்குளத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்க பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக ரஷிய தூதர் கூறினார். 
கூடங்குளத்தில் 5-வது, 6-வது அணு உலைகள் அமைக்க பேச்சுவார்த்தை: ரஷிய தூதர் தகவல்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வருடாந்திர பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா வருகிறார். இந்த பேச்சுவார்த்தை 11-ந்தேதி நடக்கிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள ரஷிய தூதர் அலெக்சாண்டர் கடாகின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

அணுமின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக இந்தியா, ரஷியா நாடுகளுக்கு இடையே பெரிய திட்டங்கள் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது உலையில் மார்ச் மாதம் சோதனை அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். முதல் அணு உலையில் ஏற்பட்டு இருந்த சிறிய தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது. 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3-வது மற்றும் 4-வது உலைகள் அமைப்பதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் ரஷிய அதிபர் புதின் வருகையின்போது கையெழுத்தாக உள்ளது. இரு நாடுகளும் கூடங்குளத்தில் 5-வது மற்றும் 6 -வது அணு உலைகளை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க உள்ளன. 

இந்தியாவில் 14 முதல் 16 அணு உலைகள் அமைப்பதற்கு உதவ ரஷியா ஏற்கனவே ஒப்புக்கொண்டு இருந்தது ஆனால் இப்போது இந்தியாவின் மின்சார தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், இது 20 முதல் 24 அணு உலைகளாக அதிகரிக்கப்படும். 

இதற்கான புதிய இடங்களை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்து இருக்கிறோம். அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும். 

ரஷியா-இந்தியா இடையே எரிவாயு குழாய் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்துக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top