தமிழில் ‘பாய்ஸ்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. விஜய்யுடன் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ஜெயம்ரவியுடன் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, தனுசுடன் ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். நடிகை ஜெனிலியா குழந்தைக்கு ரியான் என பெயர் வைப்பு

இந்த நிலையில் இந்தி நடிகர் ரிதேஷ் தேஜ்முக்கை ஜெனிலியா காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் 2012–ல் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 

கர்ப்பமாக இருந்த ஜெனிலியாவுக்கு கடந்த 25–ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்தன. நிறைய பெயர்களை பரிசீலித்தார்கள். 

இறுதியில் ‘ரியான்’ என்ற பெயரை தேர்வு செய்து சூட்டி உள்ளனர். இதனை ஜெனிலியா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். குழந்தைக்கு இந்தி பட உலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top