ஐதராபாத், டிச. 8-

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி தனது 87வது வயதில் இன்று காலமானார். தலைசிறந்த வாய்ப்பாட்டு கலைஞரான கிருஷ்ணமூர்த்தி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்

இந்நிலையில் இன்று அதிகாலை 1.38 மணியளவில் அவர் தனது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கர்நாடக இசையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதில் கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறியுள்ள நாயுடு, அவரது வழிகாட்டுதலின்படி திருப்பதி தேவஸ்தானத்தின் "அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை" டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியதாக தெரிவித்தார். 

கர்நாடக இசை உலகிற்கு அவரது மறைவு பேரிழப்பு என்று நாயுடு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2010 ஆம் ஆண்டு முத்ரா விருது வழங்கி கிருஷ்ணமூர்த்தி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top