புதுடெல்லி, டிச. 8–
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களின் படி அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்கள், கடன் விவரங்கள், முதலீட்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்களின் மனைவி மற்றும் வாரிசுகள் வசம் உள்ள சொத்து விவரங்களையும் அரசுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும்.கணக்கு காட்டும் படிவம் எளிதாக மாறுகிறது: மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை ஏற்பு
ஆனால் மத்திய அரசு அதிகாரிகளின் சொத்து விவர படிவம் நீண்டதாகவும் குழப்பமாகவும் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த படிவங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. எளிதாக புரியும் வகையில் இந்த படிவங்கள் தயாராகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31–ந் தேதிக்குள் சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் புதிய படிவங்கள் நடை முறைக்கு வருவதால் சொத்து விவரங்களை செப்டம்பருக்குள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன் பிறகு அதற்கான கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
வருகிற 31–ந் தேதிக்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top