திருவிடைமருதூர், டிச.5–
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதையொட்டி பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும் சொந்த வீடு இல்லாத பெற்றோர்கள் 50 பேருக்கு வீடு கட்ட நிலம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.30 லட்சமும், காயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கு: ஓய்வு பெற்ற நீதிபதி இன்று விசாரணை
இந்தநிலையில் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட் உத்தரவுபடி ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் தனிநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர் இன்று கும்பகோணம் வந்தனர். நீதிபதி வெங்கம்ராமன் கிருஷ்ணா பள்ளிக்கு சென்று தீவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அங்குள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் காயம் அடைந்த குழந்தைகளையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்த வழக்கில் நியாயமான நீதி கிடைக்க பாடுபடுவேன். இதுதொடர்பாக விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top