மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த வருத்தத்தை ஏற்க மறுத்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்.நாடாளுமன்ற வளாகத்தில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள். | படம்: வி.சுதர்ஷன்.
மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக மாநிலங்களவையில் நான்காவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நாட்டின் நலன் கருதி நாம் கூட்டத்தொடரை நடத்த வழி செய்ய வேண்டும்.
மக்களவையில் இந்த விவகாரம் கைவிடப்பட்டு கூட்டத்தொடரை நடத்த அனுமதி அளித்துள்ள உறுப்பினர்களுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
பாஜக எம்.பி.க்கள் மூலம் தவறான கருத்துக்கள் வெளிவருவது ஏற்கத்தக்கதல்ல. இதனை எப்போதும் ஆதரிக்க முடியாது. அதே போல, சம்பந்தப்பட்ட அமைச்சர் அவையில் மன்னிப்பு கோரிவிட்டார். இதன் பின்னரும் இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்துவது நியாயப்படுத்துவது சரியல்ல. உறுப்பினர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இருப்பினும் பிரதமரின் சமாதான முயற்சியை ஏற்க மறுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் வாயில் கருப்புத் துணி கட்டி, அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கையில் 'ஒருங்கிணைந்த இந்தியா வேண்டும்' என்று எழுதிய பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top