பார்க்வால் பார்டர், டிச. 5-

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு- காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத விரக்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்று ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.அதிக வாக்குப்பதிவு: விரக்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்- ராஜ்நாத் சிங்

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நடைபெற்று வரும் தேர்தலில் பொதுமக்களின் பேராதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது. இதனாலேயே வரலாற்றுமிக்க வாக்குப்பதிவான 71 முதல் 72 சதவீத வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளன. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் விரக்தியில் மக்களைப் பயமுறுத்தும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இன்று காஷ்மீரில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்று சம்பவங்கள் நடந்து கொண்டு வருகின்றன. தீவிரவாதிகள் சில வீரர்களை கொன்றனர். ஆனால், நம்முடைய ராணுவம் வெற்றிக்கரமாக பதிலடி கொடுத்து அவர்களை வீழ்த்தியிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் தீவிரவாதிகள், இங்கு அழிவை ஏற்படுத்துவதுடன் அவர்களும் சாகின்றனர்’’ என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top