பிறவியிலேயே காது கேட் காத 2 குழந்தைகளுக்கு ஆசியாவிலேயே முதல்முறை யாக அறுவை சிகிச்சை மூலம் மூளை தண்டுவடத்தில் இம்பிளான்ட் கருவி பொருத்தப் பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றாக காது கேட்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தலா ரூ.18.25 லட்சம் செலவில் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த இளைய ராஜா லட்சுமி தம்பதியின் 2 வயது குழந்தை குகன். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த போனிபாஸ் விக்டோரியா தம்பதியின் 5 வயது மகள் பெனினாள். இந்த 2 குழந்தைகளுக்கும் காது கேட்கவில்லை. இதனால், 2 பேரையும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மெட்ராஸ் இஎன்டி (காது மூக்கு தொண்டை) ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்த்தனர். அவர்களை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய் தனர். 2 குழந்தைகளுக்கும் பிறவியிலேயே காது கேட்க வில்லை என்றும், உள்காது மற்றும் செவி நரம்பு இல்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் இம்பிளான்ட் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டது.
ஆராய்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், காது மூக்கு தொண்டை நிபுணருமான டாக்டர் மோகன் காமேஸ்வரன் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சி.வாசுதேவன் தலைமையிலான குழுவினர் 2 குழந்தைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்தனர். மூளையின் அடிப்பகுதியில் தண்டுவடத்தில் சிறிய அளவிலான இம்பிளான்ட் கருவியை வெற்றிகரமாக பொருத் தினர். இந்த சிகிச்சைக்கு பிறகு, 2 குழந்தைகளுக்கும் நன்றாக காது கேட்கத் தொடங்கியுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
இதுதொடர்பாக டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதா வது: பிறவியிலேயே காது கேட்காத குழந்தைகளுக்கு உள்காது மற்றும் செவி நரம்பு வளர்ச்சி அடைந்திருந்தால் காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தி காது கேட்க வைத்துவிடலாம். 2 குழந்தைகளுக்கும் உள் காது மற்றும் செவி நரம்பு இல்லை. அதனால் அறுவை சிகிச்சை மூலம் மூளையின் தண்டுவடத்தில் இம்பிளான்ட் கருவியை பொருத்தி காது கேட்க வைத்துள்ளோம். சிக்கலான இந்த அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. ஆசியாவிலேயே முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் மூளையின் தண்டுவடத்தில் இம்பிளான்ட் கருவியைப் பொருத்தியுள்ளோம்.
இந்த அறுவை சிகிச்சைக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.18.25 லட்சம் செலவானது. இரு குழந்தைகளும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவை. முதல் வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், செலவில்லாமல் 2 குழந்தைகளும் பயன்பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top