விழுப்புரம், டிச.3–
டேங்கர் லாரியில் கொண்டுவரப்படும் ஆவின் பாலை திருடி அதில் சிலர் தண்ணீர் கலப்படம் செய்வதை கடந்த ஆகஸ்டு மாதம் 19–ந் தேதி வெள்ளிமேடு பேட்டை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 8 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்புவைத்தியநாதன் உள்பட 11 பேரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அவர்கள் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் கோர்ட்டில் வைத்தியநாதன் 4 முறை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து 5–வது முறையாக விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வைத்தியநாதன் சார்பில் வக்கீல் தினகரன் ஆஜராகி வாதாடினார். வைத்தியநாதன் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேலாகிவிட்டது எனவே அவரை ஜாமீனில் விடவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு அரசு வக்கீல் அம்ஜத்கான் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை ஜாமீனில் விடக்கூடாது என்று கூறினார். இதையடுத்து இந்த ஜாமீன் மனு விசாணையை நாளை (4–ந் தேதிக்கு) தள்ளிவைத்து குமார் சரவணன் உத்தரவிட்டார். மேலும் ஜாமீன் மனு தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top