வாஷிங்டன், டிச. 3-

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மாவை நியமிக்க, அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமிக்கப்படுகிறார்
அந்நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த செனட் அமைப்பான வெளிநாட்டு உறவு குழு கூட்டத்தில் கட்சி எல்லைகளை கடந்து அந்நாட்டின் முக்கிய செனட்டர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தனர். இந்த அதிமுக்கியம் வாய்ந்த பொறுப்புக்கு ராகுல் வர்மாவை தேர்வு செய்வதற்கு குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியின் செனட்டர்கள் ஒரு மித்த கருத்துடன் ஆதரவு தெரிவித்தனர். செனட் சபை கூட்டத்திற்கு அரிதாக வரும் அதன் தலைவரான ஹாரி ரீட், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வர்மாவை அறிமுகப்படுத்தினார்.

வர்மாவை அறிமுகப்படுத்தி அவர் கூறியதாவது;

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராவதற்கு தகுதியான நபர்களில் வர்மா மிகவும் பொருத்தமான நபர். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளிநாட்டு கொள்கைகளில் அவருக்கு மிகுந்த ஞானம் உள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்த ஹிலாரி கிளிண்டனுடன் அவர் பணியாற்றியுள்ளார். விசாலமான அறிவுக்கூர்மை கொண்ட அவர் அற்புதமான, மிக அற்புதமான நபர் என்று ரீட் கூறினார்.

குடியரசுக் கட்சியின் செனட்டரான ஜான் மெக்கெய்ன் கூறுகையில், புதிய அரசுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து வர்மா செயல்படுவார் என நம்புவதாக கூறினார். இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே எதிர்கால உறவு சிறப்பாக அமையும் வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வர்மா ஏற்க உள்ளதாக கூறிய மெக்கெய்ன், இப்பணியில் சவால்கள் அதிகம் இருந்தாலும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் அந்நாட்டின் புதிய பிரதமரான மோடி மீது தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top