நமது நாடு பல்வேறு வன வளங்களால் கொழிக்கிறது. ஆயினும் குப்பை கழிவுகள் அந்த வளத்தை அழித்துக் கொண்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உன்னதமான தூய்மை இந்தியா பிரசாரத்தின் அடிப்படையில் சுற்றுப்புற சூழ்நிலைகளில் சுகாதாரத்தை பற்றிய அவசியத்தைக் கூறும் என்வைரமென்டலிஸ்ட் பவுண்டேசன் ஆப் இந்தியா (Environmentalist Foundation of India) சென்னை அருகே உள்ள முடிச்சூர் என்ற கிராமத்தில் ஒரு விலங்குகளுக்கான மையத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. 
சுகாதார விழிப்புணர்வு பணியில் இணைத்துக் கொண்ட திரிஷா
விலங்குகள் மீது அலாதி அன்பு கொண்டவரான நடிகை த்ரிஷா இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய 19 இளைஞர்கள் உடன் கலந்து கொண்டு அந்த மையத்தில் மேற்கொள்ளும் சுகாதார விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அவர் இந்த சேவையை மேற்கொண்டார். 

இந்த விலங்கு மையம் நிராதரவான மற்றும் வயோதிக விலங்குகளுக்கான பிரத்தியேக மையம் ஆகும்.2015 ஆண்டு முதல் துவங்க உள்ள இந்த மையம் மேற்சொன்ன காரணங்களுக்காக செயல்படும். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை திரிஷா கூறும்போது, இந்த பூமி நமக்கு மட்டுமே உரியது அல்ல. இதர ஜீவனங்களும் நம்முடன் வாழ வேண்டும். அவை வாழ தகுதியான சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையை அமைத்து தருவது நம் பொறுப்பு என்று கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top