இந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை டி.கே இயக்கியிருந்தார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருந்தார். ராமி ஒளிப்பதிவை செய்திருந்தார். இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். 
பயமுறுத்திய யாமிருக்க பயமே படக்குழு சிரிக்க வைக்க வருகிறது
தற்போது டி.கே. அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார். இதைப்பற்றி தயாரிப்பாளர் கூறும்போது, டி.கே.வின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. முழுமையான சிரிப்பு கலவரமான பொழுது போக்கு படம் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தை விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top