சென்னை, டிச.3–
மணிவிழி உட்பட பலர் தொடர்ந்த மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குககளை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து இன்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக்கூடாது?: அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
நாட்டில் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கிறதோ இல்லையோ? ஆனால், தெரு எங்கும் மதுபான கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் மூலம் தாராளமாக மது பாட்டில்கள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் மது விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வரை தமிழக அரசுக்கு வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மது விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய வருமானத்தை, வேறு வழிகளில் பெறுவதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? குடித்த விட்டு வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படுவதாக சொன்னாலும், தொடர்ந்து பலர் குடித்து விட்டுத் தான் வாகனத்தை ஓட்டுகின்றனர்.
இதனால் பல விபத்துக்கள் நடந்து, பலர் பலியாகுகின்றனர். எனவே, குடி போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது அரசு ஏன் தீவிரமான கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது? குடி பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை அழிக்க, குஜராத் மாநிலத்தை போல், தமிழகத்திலும் ஏன் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தக்கூடாது? மதுக்கடைகளில் வேலை நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது? இந்த கேள்விக்களுக்கு எல்லாம் மத்திய, மாநில அரசுகள் தங்களது விரிவான பதில் மனுவை வருகிற 12–ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top