கொடைரோடு, டிச.3–
பாராளுமன்ற கூட்டத்தில் தேசியளவில் ஜவுளித்துறை திருத்திய மதிப்பீட்டு கூட்டுதல் மசோதா தாக்கல் விவாதத்தில் திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பேசியதாவது:–திண்டுக்கல்லில் தேசிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்: உதயகுமார் எம்.பி. பேச்சு
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நீண்ட நெடுங்காலமாக பாரம்பரியமிக்க சுங்கடி சேலை செய்ய கூடிய நெசவு தொழில் சின்னாளப்பட்டியில் நடைபெறுகிறது.
இந்த தொழில் உலக அளவில் புகழ் பெற்றதாகும். பாரம்பரிய முறையில் நெசவு செய்யப்பட்ட சுங்கடி சேலை உலக அளவில் உள்ள தமிழ் பெண்கள் விரும்பி அணிந்து வருகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் வாழும் இடங்களுக்கு எல்லாம் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நெசவு தொழில் அதிகப்படியாக சிறு தொழிலாக செயல்படுகிறது.
சின்னாளபட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் 25 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழக அரசு, பசுமை வீடு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் செலவில் வீடு கட்டிதரப்படுகிறது. அந்த வீட்டிலேயே நெசவு தறி அமைத்தல், வீடுகளில் சூரிய விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நெசவாளர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிர் காலங்களில் முன் மாதிரியாக இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் தறி கூடங்களில் சில்க்ஸ் சேலை நெசவு செய்து வருகின்றனர். சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேலைகளால் வியாபாரம் செய்வதால் இங்குள்ள நெசவாளர்களுக்கு போட்டிகள் இருப்பதாலும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுகிறது,
மத்திய அரசு நிதி உதவி செய்திட வேண்டும், தொழில் நெசவு கலைஞர்கள், நெசவாளர்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும், திண்டுக்கல் மாவட்டம் ஜவுளி தொழில், நூற்பாலை தொழில் அமைக்க சாதகமான சூழ்நிலை உள்ளது.
திண்டுக்கலில் தேசிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். அதனால் சிறு, நடுத்தர மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஜவுளி தொழிலாளர்கள், நெசவு தொழிலாளர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்து முன்னேற்றம் அடைவார்கள். நலிவுற்ற நூற்பாலையும் மேம்படுத்த நிதி, பாரம்பரியமிக்க தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top