உதயநிதியும்-நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருகிறார். ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
நண்பேன்டா படத்தின் பாடல்கள் டிசம்பர் 23-ம் தேதி வெளியீடு
காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் பாடல் காட்சிகள் லண்டனிலும் படமாக்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை டிசம்பர் 23-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top