கொல்கத்தா, நவ. 11–
இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியில் கொல்கத்தா–கோவா அணிகள் மோதிய ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இந்த ‘டிரா’ மூலம் கொல்கத்தா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.சிவப்பு அட்டை கோவா வீரர் அப்பீல் செய்கிறார்
இந்த ஆட்டத்தில் நடுவரின் செயல்பாடு கோவா அணிக்கு எதிராக இருந்தது.
பெனால்டி பாக்சுக்குள் கொல்கத்தா அணி வீரர் பிக்கு நிலை தடுமாறி விழுந்தார். கோவா பின்கள வீரர் புருனோ பின்ஹெய்ரோ அவரை தள்ளி விட்டதாக கூறி அவரை சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினர்.
டெலிவிஷன் ரீபிளேயில் கோவா பின்கள வீரர் புருனோ கொல்கத்தா வீரர் பிக்குவை தொடவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. நடுவரின் இந்த முடிவு கொல்கத்தாவுக்கு சாதகமாக அமைந்ததோடு அரை இறுதியிலும் நுழைய முடிந்தது.
நடுவரின் இந்த முடிவால் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த புருனோ மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றியதை எதிர்த்து அவர் போட்டி அமைப்பு குழுவிடம் அப்பீல் செய்ய உள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top