அடிலெய்டு, டிச. 11-

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த ரன்னுடன் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா 3-வது நாள் தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தவான், முரளி விஜய் களம் இறங்கினார்கள். அதிரடியாக விளையாடிய தாவன் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து புஜாரா களம் இறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். முரளி விஜய் 53 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் வீராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய புஜாரா அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய புஜாரா 73 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
கோலி சதத்தால் ஆஸி. ரன் குவிப்புக்கு இந்தியா பதிலடி
4-வது விக்கெட்டுக்கு கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. ரகானே 62 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். வீராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 7-வது சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து விளையாடிய வீராட் கோலி 115 ரன்னில் அவுட் ஆனார்.

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சர்மாவும், சஹாவும் 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை அவுட் ஆகாமல் இருந்தனர். இந்தியா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் 5 விக்கெட் கைவசம் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவை விட 148 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

நாளை சர்மா, சஹா ஆகியோர் விளையாடுவதை பொருத்து இந்த போட்டியின் முடிவு மாறுபடும். இவர்கள் இருவரும் 100 ரன்னுக்கு மேல் அடித்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது. வந்த உடன் அவுட் ஆனால், ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விரைவாக ரன் சேர்த்து இந்தியாவிற்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கும்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top