பர்மாவில், புத்தரை ஒரு விளம்பரத்தில் இழிவு படுத்தினர் எனும் குற்றச்சாட்டில் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பர்மாவில், புத்தரை இழிவு படுத்தினர் எனும் குற்றச்சாட்டில் பர்மாவில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்
முன்னர் ரங்கூன் என்று அழைக்கப்பட்ட யாங்கோன் நகரில் இருக்கும் ஒரு மதுபான விடுதிக்கான விளம்பரத்தில் புத்தர் காதுகளில் ‘ஹெட்ஃபோன்களை’ அணிந்துகொண்டு இசை கேட்பதுபோல சித்தரித்திருந்தனர்.
இதையடுத்து இரண்டு பர்மியர்களும் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த விளம்பரம் அந்த மதுபான விடுதியின் ஃபேஸ் புக் பக்கத்தில் வெளியானவுடன் இணையதளங்களில் கோபாவேசக் கருத்துக்கள் குவிய ஆரம்பித்தன.
பர்மியச் சட்டங்களின்படி நாட்டில் எந்த மதத்தையும் இழிவுபடுத்துவது சட்டவிரோதமானது.
யாங்கோன் நகரிலுள்ள விஜி ஆஸ்ட்ரோ பார் எனும் அந்த மதுபான விடுதி வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், புத்தர் கண்களை மூடிக் கொண்டு, காதில் ‘ஹெட்ஃபோன்களை’ மாட்டிக் கொண்டிருப்பதும் அவரைச் சுற்றி கண்களைக் கூசவைக்கும் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதும் காணப்படுகிறது.
அதே விளம்பரத்தில், புத்தரது படத்துக்கு கீழே ஞாயிற்றுக்கிழமை மதியங்களில், அளவில்லாமல் விரும்பியபடி மதுவும் ஹூக்கா குழாய்கள் மூலம் புகைக்கவும் வாருங்கள் என்று கூறி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, நேற்று காவல்துறையினர் அந்த மதுபான விடுதியை மூடி, அதன் பொது மேலாளர் பிலிப் ஃபிளாக்வுட் மற்றும் துன் துரேய்ன், டுட் கோ கோ ல்வின் ஆகிய இரு பர்மியர்களையும் கைது செய்துள்ளனர் என ஏ எஃப் பி செய்தி சேவை கூறுகிறது.
நாட்டின் மத விவிகாரங்கள் அமைச்சின் அதிகாரி ஒருவர் புகார் செய்தததை இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த மூவர் மீது மீதும் முறைப்படியான குற்றச்சாட்டு அடுத்த வாரம் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
எனினும் அந்த விளம்பரங்கள் இப்போது அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மன்னிப்பு கோரும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. எந்தத் தனி நபரையோ மதக்குழுவினரையோ புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அந்த விடுதியின் நிர்வாகம் கூறியுள்ளது.
பர்மாவில் அண்மைக் காலமாக பௌத்த தேசியவாதமும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தகுந்தது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top