மன்னார்குடி, டிச. 11–
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (40). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் –மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தாய் வீடான தென் பாதிக்கு சென்று விட்டார்.மன்னார்குடி அருகே வாலிபர்-காதலி கடத்தி கொலை
அவருடன் குழந்தைகளும் சென்று விட்டனர். இதனால் பழனியப்பன் தனியாக வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற பின் அவர் கோவைக்கு சென்று கொத்தனார் வேலை பார்த்தார்.
அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஊருக்கு வந்து செல்லும் போது கீழமருதூர் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி அமிர்தவள்ளியுடன் (25) பழக்கம் ஏற்பட்டது.
அவரை கோவைக்கு அழைத்து சென்றார். அவர்கள் திருமணம் செய்யாமல் கணவன்–மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி அருகே உள்ள வேதபுரம் ரோடு ஓ.என்.ஜி.சி. அலுவலகம் அருகே உள்ள வயல் வெளி பகுதியில் பழனியப்பன் பிணமாக கிடந்தார்.
அவரது தலை சேற்றில் அமுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கால் மற்றும் உடல் பகுதிதான் வெளியே தெரிந்த நிலையில் காணப்பட்டது.
அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தாநல்லூர் ரோடு ஆர்ச் பகுதியில் குன்னியூர் ஊராட்சி அரிச்சந்திரா நதியில் அமிர்தவள்ளி பிணமாக கிடந்தார்.
அவர்கள் இருவரையும் கடத்தி கொலை செய்து ஆறு மற்றும் வயல் வெளியில் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து மன்னார்குடி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. அப்பாச்சாமி, மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்பநாபன், சப்–இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த பழனியப்பன், அமிர்தவள்ளி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. பழனியப்பன் கோவையில் உள்ள ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்ததால் அப்பெண்ணின் உறவினர்கள் இருவரையும் தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொத்தனார்– கள்ளக்காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top