வாஷிங்டன், டிச.11-

பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் மாகாணத்தில் உள்ள பழங்குடியின பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் முன்னேற்றம் கண்டுவருவதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.  
தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு
“இந்த நடவடிக்கைகளால் பழங்குடி பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆயுதக்குவியல்கள் குறிப்பாக ’மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்கள்’ கைப்பற்றப்பட்டிருக்கிறது. தாக்குதலில் தீவிரமாக பாதிக்கப்பட்ட இந்த தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது” என்று ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதி ஜேரட் ப்ளான்க் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“நிச்சயமாக இந்த வேலை முடியவில்லை” என்ற ப்ளான்க், ஹக்கானி வலையமைப்பு உட்பட பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபான்கள் தொடர்ந்து, அதன் அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதையும் குறிப்பிட்டார்.  

மும்பையில் நடைபெற்ற 26/11 தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீதிற்கு ஆதரவாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமெரிக்கா அந்நாட்டை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top