முகோ,டிச.9- 

சென்ற வருடம் டிசம்பரில் ஜப்பான் நாட்டின் முகோ நகரத்தில் ஓய்வு பெற்ற 75 வயதான இசோ ககேஹீ என்பவரை அவரது வீட்டில் சடலமாக அந்நாட்டு காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
பணத்துக்காக திருமணம் செய்து 6 பேரைக் கொலை செய்த விதவை: அதிர்ச்சியில் ஜப்பான்
முதலில் திடீர் இருதயக் கோளாறு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று நினைத்த காவல்துறை, மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த அந்த முதியவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் என்ற விவரம் தெரியவந்ததும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தது.  

மரணமடைந்த இசோவின் ரத்தத்தை சோதனைக்கு உட்படுத்தும் போது அதில் உயிரை குடிக்கும் சயனைடு கலந்திருப்பது தெரிய வந்தது. எனவே சந்தேகத்தின் பேரில் 68 வயதான அவரது புது மனைவி சிசாகோவிடம் விசாரணை நடத்த தொடங்கினர்.

விசாரணையின் முடிவில், திருமணம் அல்லது காதல் என்ற போர்வையில் கடந்த 8 வருடங்களில் சிசாகோவால் கொல்லப்பட்ட ஆறு முதியவர்களில் ஒருவர் இசோ ககேஹீ என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இறந்த எல்லாருமே சொந்த வீடு, நல்ல சேமிப்பு என்று ஓய்வுக்குப் பிறகு நல்வாழ்வு வாழ தங்கள் வாழ்நாள் சேமிப்பை பாதுகாத்து வைத்திருந்தவர்கள். இதில் நிறைய பேர் சிசாகோவை சொத்துக்கான வாரிசாக நியமித்த கொஞ்ச காலத்திலேயே இறந்துள்ளனர்.

இந்த அச்சமூட்டும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது சிசாகோ என்பது தெரியவந்ததையடுத்து, அந்நாட்டின் தலைப்புச் செய்திகளில் ‘கறுப்பு விதவை’ என்று பெயரிடப்பட்டார் அவர். மனைவியை இழந்த, விவாகரத்தான பணக்கார வயதான ஆண்களை ’டேட்டிங் ஏஜென்ஸி’ க்கள் மூலமாகக் கண்டுபிடித்து, பின் அவர்களை தான் காதலிப்பதாக ஈ-மெயில் செய்து தன் வலையில் சிசாகோ விழச்செய்தது வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.

போலீஸார் கைது செய்த போதும் சிசாகோ மேலும் இருவருடன் சிசாகோ டேட்டிங்கில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடந்த விபரீதங்களை சொல்லி கண்டித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top