துபாய், டிச. 9-

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் செனநாயகே, நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக ஐ.சி.சி. அவர்களை சர்வதேச போட்டியில் பந்து வீச தடை விதித்தது. தற்போது இந்த தடையை ஐ.சி.சி. நீக்கியுள்ளது.
செனநாயகே, வில்லியம்சன் சர்வதேச போட்டிகளில் பந்து வீசலாம்: தடையை நீக்கியது ஐ.சி.சி.
கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போது அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் செனநாயகே பந்து வீச்சு ஐ.சி.சி. விதிமுறையை மீறுவதாக இருக்கிறது என்று நடுவர்கள் ஐ.சி.சி.யில் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு ஐ.சி.சி. தடை விதித்தது.

அதன்பின் சென்னையில் கடந்த மாதம் ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்ற வசதிகளுடன் அவரை பந்து வீச வைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் பந்து வீச்சில் மாற்றம் செய்து கொண்டதால், அவர் மீதான தடையை நீக்கி ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் இனி சர்வதேச போட்டிகளில் பந்து வீசலாம்.

இதேபோல், நியூசிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன் வில்லியம்சின், எப்போதாவது பகுதி நேரமாக பந்து வீசிவார். இவரது பந்து வீச்சிலும் சந்தேகம் இருந்ததால் தடைவிதித்த ஐ.சி.சி., தற்போது அவர் மீதான தடையை நீக்கியுள்ளது. இதனால் இவரும் இனிமேல் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி விதிமுறைப்படி, முதல் சஸ்பெண்டுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதி பெறும் ஒருவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் விதிமுறையை மீறியது தெரியவந்தால் குறைந்தது ஓராண்டுக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top