ரேணிகுண்டா, டிச. 9–

மூன்றாவது முறையாகவும் அரியணை ஏறும் ஆசையில் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சே திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதி வந்தடைந்தார். 
திருப்பதி வந்தார் ராஜபக்சே: தமிழக ஊடகங்களுக்கு ஆந்திர போலீசார் அனுமதி மறுப்பு
இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணியளவில் ரேணிகுண்டா வந்து இறங்கிய அவருக்கு ஆந்திர மாநில போலீசார் ’சல்யூட்’ அடித்து மரியாதை செய்தனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அலிப்ரி பகுதியை வந்தடைந்த ராஜபக்சே கார் மூலம் திருமலையை சென்றடைந்தார். 

ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் அலிபிரி பகுதியில் ராஜபக்சேயின் வருகையை படம்பிடிக்க சென்ற தமிழக நிருபர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். சிலரது கேமராக்களை ஆந்திர போலீசார் பறித்து வைத்துக்கொண்டனர்.

இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் ராஜபக்சே நாளை (புதன்கிழமை) அதிகாலை 2.45 மணி அளவில் சுப்பரபாத சேவையின் போது ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளதால் ரேணிகுண்டா-திருப்பதி-திருமலை பாதைகளிலும், திருமலையின் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top