ரஜினியின் லிங்கா படம் வருகிற 12–ந்தேதி ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. 

நடிகர் ரஜினிகாந்த், லிங்கா பட நாயகிகள் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

விழாவில் ரஜினி பேசியதாவது:– நான் நான்கு வருடங்களுக்கு மேல் படங்களில் நடிக்கவில்லை. இடையில் கோச்சடையான் வந்தது. அது அனிமேஷன் படம். நேரடி படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் இருந்தது. 

அப்போதுதான் கே.எஸ்.ரவிக்குமார் என்னை அனுகினார். லிங்கா படத்தின் கதை பற்றி சொன்னார். 6 மாதத்தில் படத்தை முடிப்பதாக இருந்தால் நடிக்கிறேன் என்றேன். அத்தனை நாளுக்குள் படத்தை முடிக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. காரணம் கதை அப்படி இருந்தது. 

இரண்டு கால கட்டத்தை உள்ளடக்கிய படமாக இருந்தது. ஒரு கதை 1940–க்கு முன்பு நடப்பது போன்றும் இன்னொரு கதை இன்றைய கால கட்டத்தில் நடிப்பது போன்றும் இருந்தது. இந்த கதைக்கு அணைக் கட்டு வேண்டும், யானைகள், குதிரைகள், பிரமாண்ட அரங்குகள் வேண்டும். ஆயிரக்கணக்கான நடிகர்களும் பணியாற்ற வேண்டி இருந்தது. 

இவ்வளவையும் வைத்து 6 மாதத்தில் படத்தை முடிப்பது சவாலான காரியம். கே.எஸ். ரவிக்குமார் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். ஆறு மாதத்திலேயே படத்தை முடித்து விட்டார். 

என்னையும் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா போன்ற பிசியான நடிகைகளையும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒன்று சேர்ந்து படத்தை திட்டமிட்டபடி முடிந்தது பெரிய சாதனை. எனக்கும் இது சவாலான படம். 
லிங்கா படத்தில் நடித்தது சவாலாக இருந்தது: ரஜினிகாந்த் பேச்சு
சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சோனாக்கி சின்ஹாவை சிறு வயதிலேயே தெரியும். என் மகள்களுடன் வளர்ந்தவர். அவரோடு காதல் டூயட் பாட வேண்டும் என்றதும் வெடவெடத்து போனேன். 

நான் அறிமுகமான முதல் படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கூட இப்படி ஆனது இல்லை. அவரோடு சேர்ந்து ஆட ரொம்ப சிரமப்பட்டேன். அவருக்கு இணையாக என் தோற்றத்தை மாற்ற மேக்கப் மேன் காஸ்ட்யூம் நிபுணர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர். 

அறுபது வயதை கடந்த என்னை இப்படி டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய தண்டனை. ஓடும் ரெயிலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையெல்லாம்விட சோனாக்சியுடன் டூயட் பாடுவது சிரமமாக இருந்தது. 

இவ்வளவுக்கும் நடுவில் திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன். ஹாலிவுட்டிலும் இதுபோன்ற பிரமாண்ட படங்கள் நிறைய வருகின்றன. அவற்றை முடிக்க நிறைய காலம் எடுக்கிறார்கள். 

தெலுங்கில் தயாராகும் படத்தை அவற்றோடு ஒப்பிடக்கூடாது. அது வேறு மாதிரி கதை. அப்படத்தை இயக்கும் ராஜாமவுலி சிறந்த டைரக்டர். அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். 

இவ்வாறு ரஜினி பேசினார். 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top