மதுரையைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். தனது முல்லைவனம் 999 படத்தின் கதையை யு டியூப்பில் இருந்து திருடி லிங்கா படத்தை தயாரித்துள்ளனர். இதனால், கதை திருட்டு தொடர்பாக ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கதை திருட்டு என்பது இருவர் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை. இப்பிரச்சினைக்கு சிவில் நீதிமன்றத்தில்தான் பரிகாரம் தேட வேண்டும். ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி டிசம்பர் 3-ம் தேதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ரவிரத்தினம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முன்தினம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும் போது, அறிவுசார் சொத்துரிமை திருட்டு தொடர்பாக மனுதாரர் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர். தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனுவில் முரண்பாடுகள் உள்ளன. இவற்றை தனி நீதிபதி கவனிக் காமல் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார் என்றார்.
இதையடுத்து, மேல்முறை யீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக காவல்துறை இயக்குநர், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர், தணிக்கை வாரியம், நடிகர் ரஜினி காந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக் குமார், தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ், கதா சிரியர் பொன்குமரன், தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலை வர் அபிராமி ராமநாதன் உள்ளிட் டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top