அடிலெய்ட் டெஸ்ட் முதல் நாளில் தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி அமைத்த களவியூகம் பற்றி ஷேன் வார்ன் நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் ஆக்ரோஷமாகவும் தேவையான சமயத்தில் பாதுகாப்பாகவும் பீல்ட் செட் செய்து ஓரளவுக்கு நன்றாகவே களவியூகம் அமைத்தார் விராட் கோலி. 4 பவுலர்களில் இசாந்த் சர்மா தவிர ஒருவருக்கும் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்வது என்பதைக் கண்டுபிடிக்கவே கடைசி செஷன் வரை ஆகிவிட்ட நிலையில், ஒரு கேப்டன் என்னதான் செய்ய முடியும்?

ஆனால் ஷேன் வார்ன் கிரிக்கெட்டை பார்க்கும் விதமும், அவர் விளையாடிய விதமும் சிலபல விசித்திரங்களை தாங்க முடியாத மனநிலையை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் பதிவு செய்த விவரம் இதோ: 

சானல் 9 தொலைக்காட்சியில் ஷேன் வார்ன் வர்ணனை செய்து கொண்டிருந்த போது கடைசி 2 மணி நேர ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி அமைத்த களவியூகம் பற்றி அவர் கூறியதாவது:
"அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் முதல் நாள் ஆட்டம் எப்பவும் இப்படித்தான் ஆகும். 30 டிகிரி வெயில். தார்ச்சாலை போல பிட்ச். இது தவிர விசித்திரமாக முதல் ஸ்லிப்பும் இல்லாமல் 2-ஆம் ஸ்லிப்பும் இல்லாமல் ஒன்றரை ஸ்லிப் அதை விட்டால் 3-வது ஸ்லிப் என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது” என்றார்.

தோனியாகட்டும், விராட் கோலி ஆகட்டும் ஸ்லிப்பில் பீல்டர்களை நிற்க வைக்கும் விதம் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆழமாகப் பார்த்த, விளையாடிய எவருக்கும் இத்தகைய உணர்வை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததே.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top