பல ஆயிரங்கள் கொடுத்து ஆசை ஆசையாக வாங்கும் ஸ்மார்ட் போன்கள் ஒரு நொடிப் பொழுதில் கைதவறி கீழே விழும்போது ஏற்படும் தவிப்பு சொல்லி மாளாது. மேலும் அதில் நாம் சேமித்து வைத்திருந்த செல்போன் எண்கள் உள்ளிட்டவை அனைத்தையும் மீட்க முடியுமா என்ற பரிதவிப்பு பலருக்கும் ஏற்படுவதுண்டு. இதைப் போக்கும் வகையில் புதிய வகை புத்திசாலி ஐ-போன்களை உருவாக்குகிறது ஆப்பிள் நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் சேதத்தைக் கணக்கிட்டு முக்கியமான பகுதிகளை போனின் மையப் பகுதிக்கு நகர்த்திவிடும்.
இத்தகைய கருவியை நிகோலஸ் வி. கிங் மற்றும் பிளெட்சர் ரோத்காஃப் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இப்போது வரும் ஐ-பேட் மற்றும் ஐ-போன்களில் ஆக்சிலரோமீட்டர்கள், கைரோஸ்கோப்ஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆகியன உள்ளன.
போன் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் போனின் முக்கிய பகுதிக்குத் தகவல் அனுப்பி விடும். அப்போது அதிலுள்ள மோட்டார் விரைவாக செயல்பட்டு ஐ-போன் பக்கவாட்டில் விழும்படி செய்து சேதத்தின் அளவைக் குறைத்துவிடும்.
நாம் வாங்கும் ஐ-போன் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்லதுதானே.!

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top