புதுடெல்லி, டிச.7-

மது வகைகளின் பயன்பாடு, சிகரெட் பிடிப்பது, புகையிலை மெல்வது போன்ற கொடிய பழக்கங்களால் உண்டாகும் நோய்களின் சிகிச்சைக்காக மத்திய அரசும் தனிநபர்களும் ஆண்டொன்றுக்கு எவ்வளவு தொகையை செலவிடுகின்றனர்? என டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கோபால் பிரசாத் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.
புகையிலை சார்ந்த நோய்களின் சிகிச்சைக்காக ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி செலவிட்ட இந்தியா
இதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் அளித்துள்ள பதிலில், ‘கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகளின்படி, சிகரெட் பிடிப்பது, புகையிலை மெல்வது போன்ற பழக்கங்களால் பாதிக்கப்பட்ட 35க்கும் 69க்கும் இடைப்பட்ட வயதுடைய நோயாளிகளின் சிகிச்சைக்கு மட்டும் 1.04 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top