திட்ட கமிஷனுக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், இப்போது உள்ள அமைப்பை கலைப்பது குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டத்தை வகுக்க முடியாது. திட்டக் கமிஷனுக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க, பெரும்பாலான முதல்வர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதிகாரங்களையும் திட்டங்களையும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டியது அவசியம்" என்றார்.டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி. | படம்: பிடிஐமுன்னதாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, "திட்டக் கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்படும் புதிய அமைப்பு ‘டீம் இந்தியா’ என்ற கருத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
டீம் இந்தியா என்பது பிரதமர், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகிய மூன்று தரப்பினரையும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளையும் உள்ளடக்கியதாகும்.
புதிய திட்ட கமிஷனில் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். தங்களுடைய கருத்துகளை அல்லது மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு தேவையான தளம் எதுவும் இல்லை என மாநில அரசுகள் கவலை அடைவதுண்டு. எனவே, இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கப்பூர்வ வழிமுறைகள் புதிய அமைப்பில் இடம்பெற வேண்டும்.
திட்ட கமிஷனின் பங்கு, முக்கியத்துவம் மற்றும் மறுசீரமைப்பு குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடந்த 1992-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதன்முறையாக திட்ட கமிஷன் குறித்து தன்னிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த 2012-ம் ஆண்டிலும் திட்டக் குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற கலந்தாய்வுக் குழு வலியுறுத்தியது.
நாட்டை பலப்படுத்தும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் (தனியார் துறை) முக்கியத்துவம் தரும் புதிய அமைப்பை உருவாக்கலாமா?" என்று மாநில முதல்வர்களிடம் கேள்வியும் எழுப்பினார் மோடி.திட்ட கமிஷன் யோசனை
திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாகக்கூடிய புதிய அமைப்பு, மாறிவரும் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் பல்வேறு துறை வல்லுநர்கள் மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகவும் விளங்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் திட்ட கமிஷன் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லர் யோசனை தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு:
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக புதிய அமைப்பைத் துவங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியக் கூட்டாட்சி முறையில், மாநிலங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
கடந்த ஆண்டுகளில் திட்டக் கமிஷன் இந்தப் பணிகளை செய்யத் தவறி, ஆலோசனை கூறும் அமைப்பு என்பதில் தவறி விட்டது. பொது நிதிப் பங்களிப்பு திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் திட்டக் கமிஷன் தோல்வியடைந்து விட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, தனியார் துறை வளர்ச்சி கண்டு விட்டது. தற்போது திட்டக் கமிஷனுக்கு பதில் புதிய அமைப்பு ஏற்படுத்த பிரதமர் முயற்சிப்பது வரவேற்கத்தக்கது.
மாநிலங்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி பெற்றாலும், துரதிர்ஷ்டவசமாக மத்திய, மாநில அரசுகள் உறவு தொடர்ந்து பின் தங்கிய நிலையில் உள்ளது. மாநிலங்களின் கருத்துகள் மற்றும் திட்டங்களில், திட்டக் கமிஷன் மற்றும் மத்திய அமைச்சரவைகளின் அணுகுமுறை மோசமானதாக உள்ளது.
புதிய அமைப்பிலாவது மாநில அரசுகளின் கருத்துகள் பரிசீலிக்கப்பட வேண்டும். மாநில முதல்வர்கள் இந்த புதிய அமைப்பில் முக்கியத்துவம் பெறுவதுடன், மாநிலங்களின் கருத்துகள் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். புதிய அமைப்பில் மாநில முதல்வர்களின் கவுன்சில் என்பது ஒரு சடங்கான அமைப்பாக இல்லாமல், செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை இருக்கக் கூடாது.
குறிப்பாக மாநிலங்கள் இடையில் நதி நீர் தேவையை தேசிய நதி நீர் ஒருங்கிணைப்புக் குழுமம் மூலம் தீர்த்து வைத்தல், எரிசக்தி துறையில் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வழங்குதல், மின் தொடரமைப்பு வசதி ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் துறை அனுமதியை விரைந்து வழங்குதல் போன்ற முக்கிய விஷயங்களில் முதல்வர்கள் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கி, கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு திட்ட நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சமற்ற வெளிப்படைத் தன்மை வேண்டும். திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை மறு சீரமைக்கப்பட வேண்டும். மத்திய நிதி ஆணையம் பரிந்துரைப்படி, மாநில செலவினங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top