ஜெயங்கொண்டம் , டிச.7–
அரியலூர் மாவட்டம், தா.பழூர் – சுத்தமல்லி பிரிவு சாலையில் ஒரு தனியார் கோழிக்கடை உள்ளது. இந்தக் கோழிக்கறி கடையில் விற்பனையாகும் கோழிகள் அனைத்தும் பறவை காய்ச்சல் நோய் கண்ட கோழிகள், இங்கு கோழிகள் வாங்கி சாப்பிடுபவர்கள் இறந்து போவார்கள் என அனைத்து சமுதாய நலன் சங்கம், தா.பழூர் ஒன்றியம் என அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ்கள் தா.பழூர் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்தது.கோழிக்கறி சாப்பிட்டால் இறந்துபோவீர்கள் போஸ்டர் ஒட்டிய அச்சக மேலாளர் கைது
இதனால் தா.பழூர் மற்றும் சுற்றுப்பட்ட கிராமங்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து தா.பழூர் வட்டார கால்நடை மருத்துவ அலுவலர் தேன்மொழி, தா.பழூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி வழக்கு பதிந்து பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நோட்டீஸ் வெளியிட்டதற்காக அரியலூரிலுள்ள ஒரு தனியார் அச்சகத்தின் மேலாளர் குருவாடி பிரபு (25) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் தேன்மொழி கூறுகையில்: இது தனிப்பட்ட நபர்களின் விரோதத்தால் போஸ்டர் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. தா.பழூரில் உள்ள அனைத்து கோழிக் கடைகளிலும் சென்று பரிசோதனை செய்து பார்த்துவிட்டோம். பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறியே இல்லை. இந்த போஸ்டர் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துக் கொண்டார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top