புதுடெல்லி, டிச 8–
இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை கடுமையாக்கவும், விதிகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதத் தொகை விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து போக்கவரத்து விதிகளை கடுமையாக்கி புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் புதிய சட்டம்: போதையில் கார் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்
அடுத்த வாரம் நடைபெற உள்ள மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த புதிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் போக்கு வரத்து விதிகளை மீறும் போது தற்போது இருப்பதை விட பல மடங்கு அதிகமாக அபராதத்தை வாகன ஓட்டிகள் கட்ட வேண்டியதிருக்கும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் தற்போது ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.
இது ரூ.4 ஆயிரமாக உயர உள்ளது. 2–வது தடவை செல்போனில் பேசிக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி பிடிபட்டால் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேகமாக வாகனம் ஓட்டினால் தற்போது ரூ.400 முதல் ரூ,1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.
அது போல அதிக பாரம் ஏற்றுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது ரூ.100 முதல் ரூ.300 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை ரூ.2500 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top