புகைப்பிடித்து வருபவர்களுக்கு எதிர்காலத்தில் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என்பதை பரிசோதனை செய்வதற்கான புதிய முறையை லண்டன் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, ஒருவரின் வாய் மற்றும் மூக்கினுள் இருக்கும் செல்களை அகச்சிவப்பு ஒளி ஊடுருவும்போது, அதில் ஏற்படும் மாற்றங்களைவைத்து புற்றுநோய் வருவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.
லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சாம் ஜேன்ஸ் கூறும்போது, “தொடர்ந்து புகைப்பிடிப்பவரின் செல்களில் அதன் பாதிப்பு இருக்கும். இந்த செல்களை ஆராயும்போது, எதிர்காலத்தில் அவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என்பதை அறிய முடியும். இந்த பரிசோதனையின் மூலம் ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அல்லது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அகச்சிவப்பு ஒளி சோதனையின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதம் துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளன. புகைப்பிடிப்போருக்கு எச்சரிக்கை மணி அடிப்பதற்கான வாய்ப்பு, இந்த பரிசோதனையின் மூலம் கிடைத்துள்ளது. இவ்வாறு சாம் ஜேன்ஸ் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top