சென்னை, டிச. 8–
இந்திய சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 6 ஆட்டங்கள் முடிந்து விட்டன.
7–வது லீக் ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி. அணி டெல்லி டைனமோசை சந்திக்கிறது.இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நாளை கடைசி லீக் ஆட்டம்: சென்னை - டெல்லி அணி மோதல்
சென்னை அணி 6 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டது. நாளைய ஆட்டத்தில் 7–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சென்னை அணி உள்ளது. வெற்றி பெற்றால் தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்க முடியும்.
டெல்லி டைனமோஸ் 4 வெற்றி, 5 டிரா, 4 தோல்வுயுடன் 17 புள்ளிகள் பெற்று, 4–வது இடத்தில் உள்ளது. அரை இறுதியில் நுழைய அந்த அணி சென்னையை விழ்த்த போராடும். சென்னை அணி தகுதி பெற்று விட்டதால் ஒரு அரை இறுதி ஆட்டம் இங்கு நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் கேரளா – புனே அணிகள் மோதுகின்றன.
சென்னை – கோவா அணிகள் அரை இறுதிக்கு நுழைந்து உள்ளன. மீதியுள்ள 2 அணிகள் எவை என்பது நாளை அல்லது நாளை மறுநாள் கடைசி லீக் ஆட்டங்கள் முடிவில் தெரியும்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top