கமல் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
உத்தமவில்லன் ஆப்பிரிக்காவுக்கு பயணம்
இந்நிலையில், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இணைந்து ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அல்ஜீரியாவுக்கு பயணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அங்கு, இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளிலும், படத்திற்கான பாடல் பதிவு செய்யும் பணிகளையும் மேற்கொள்ளவிருக்கிறார்களாம். 

இப்படத்தில் கமலுடன், ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், பார்வதி நாயர், நாசர் மற்றும் கே.விஸ்வநாத், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் விநியோக உரிமையை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ஏற்கெனவே பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top