தாம்பரம் சானட்டோரியத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தாம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல்: 100 பேர் கைது
தென்சென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தி, மாநில துணைத் தலைவர் லட்சுமணன் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ. 1000–த்தில் இருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அதனை பிரதி மாதம் 10–ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திடீரென அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல்லாவரம் – தாம்பரம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். அவர்களை வேனில் அழைத்து சென்று தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top