சென்னை, டிச.2–
சென்னை ஐகோர்ட்டில், பி.மகாலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.எஸ். யோகா கல்லூரியில் சேர்ந்தேன்.
பின்னர் வேறு படிப்புக்கு சேருவதற்காக என்னுடைய 10, 12ம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டேன். ஆனால், கல்லூரி நிர்வாகம் அவற்றை வழங்க மறுக்கிறது’ என்று கூறியிருந்தார்.மாணவி கல்விச்சான்றிதழ் விவகாரம்: விழுப்புரம் கல்லூரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து, ‘கல்வி சான்றிதழ் என்பது மாணவர்களின் சொத்து. அவற்றை வைத்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் எதுவும் இல்லை. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தால், அவற்றை சட்டப்படி வசூலிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது.
எனவே, மனுதாரரின் கல்வி சான்றிதழ் அனைத்தையும் ஒரு வாரத்துக்குள் கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top