பலாசோர், டிச. 2–
இந்தியாவின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அக்னி வகை ஏவுகணைகளை தயாரித்து ராணுவத்தில் சேர்த்து வருகிறது.அணு ஆயுதம் ஏந்தி செல்லும் அக்னி–4 ஏவுகணை சோதனை வெற்றி
அந்த வகையில் அக்னி–4 என்ற நவீன ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்னி–4 ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த ஏவுகணையை ராணுவ அதிகாரிகள் சோதித்து பார்த்து வருகிறார்கள்.
இதுவரை 3 தடவை அக்னி–4 ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 20–ந் தேதி சோதித்து பார்க்கப்பட்டது. அதன் பிறகு அக்னி–4 வடிவடைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
புதுபிக்கப்பட்ட அக்னி–4 ஏவுகணையின் சோதனை இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.20 மணிக்கு ஒடிசா கடலோரம் பகுதியில் உள்ள வீலர் தீவில் நடந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் ரவிக்குமார் குப்தா கூறினார்.
அக்னி–4 ஏவுகணை மிகவும் நவீனமாக மாற்றப்பட்ட பிறகு இன்று தான் முதல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்குகளை மிக, மிகத் துல்லியமாக தாக்கி அழிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அக்னி–4 ரக ஏவுகணை அணு ஆயுதங்களை அதிக அளவில் சுமந்து செல்லக்கூடியது. அதோடு 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து செல்லக் கூடியது.
அக்னி – 1, 2, 3 மற்றும் பிரித்வி ரக ஏவுகணைகளும் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் சென்று தாக்கக் கூடியவை அந்த வரிசையில் கூடுதல் சக்தியுடன் 5–வது ஏவுகணையாக அக்னி–4 ஏவுகணை உள்ளது.
அக்னி–4 ரக ஏவுகணை இன்று காலை சரியான பாதையில் சென்று இலக்கை அடைந்ததை வங்க கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பல்கள் உறுதிப்படுத்தின.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top