லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் கடந்த 2005-ம் வெளிவந்த சண்டைக்கோழி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் லிங்குசாமி- விஷால் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைகிறார்கள். இப்படம் சண்டைக்கோழிக்கு நிகரான ஆக்சன் படமாகதான் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், இத்தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
தற்போது லிங்குசாமி கார்த்தி நடிக்கும் புதுப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ள்ளார். இப்படத்தில் பணியாற்றி வரும் வேளையிலேயே விஷாலை வைத்தும் ஒரே நேரத்தில் படம் இயக்க உள்ளதாக தெரிகிறது.
விஷாலை இயக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. விஷாலைத் தவிர மற்றவர்கள் தேர்வு இதுவரை முடிவாகவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் விஷால் நடித்து வருகிறார். அதன் பின் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

0 comments :
Post a Comment