பவுன்சர் தாக்கி பிலிப் ஹியூஸ் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்த அதிரடி வீரர் சேவாக், பவுன்சர்களுக்கு ஐசிசி தடை விதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
அதிரடி வீரர் சேவாக். | கோப்புப் படம்.
"பவுன்சரை புல்ஷாட் ஆட முயன்று தலையில் தாக்கப்பட்டு பிலிப் ஹியூஸ் மரணமடைந்தது என்னை ஆழ்ந்த துயரத்திற்கு ஆட்படுத்தியது. ஆனால், இது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு அங்கமே. எந்த ஒரு விளையாட்டிலும் காயங்கள் நம் வழியாகக் கடந்து செல்லும், சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம். பவுன்சரை அடிக்க முயலாமல் குனியலாம், எனவே ஒரு பேட்ஸ்மெனின் முடிவைப் பொறுத்தது அது. 

பவுன்சர்களுக்கு தடை விதித்தால் ஆட்டத்தில் சுவாரசியம் இருக்காது. முழுக்க முழுக்க பேட்ஸ்மென்களின் ஆட்டமாக கிரிக்கெட் மாறிவிடும், ஆகவே ஐசிசி இத்தகைய முடிவை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

பவுன்சர்கள் எனது ஹெல்மெட்டை நிறைய முறை தாக்கியிருக்கிறது. பவுன்சர்களை நீக்கி விட்டால் பவுலர்களுக்கு இருக்கும் ஒரு ஆயுதம் இல்லாது போய் விடும். பிறகு கிரிக்கெட் ஆட்டத்தில் சுவாரசியம் இருக்காது." 

என்று சேவாக் மும்பையில் மணிகிராம் ஐசிசி உலகக்கோப்பை பயண நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top