2eq51cp.jpgகடந்த சில நாட்களாக இணையதளத்தில் பரவி வரும் செய்தி என்னவென்றால் அஜித் விஜய்க்கு அறிவுரை கூறினார் என்ற செய்திதான்.
இது என்னவென்றால், சிம்புதேவன் இயக்கத்தில் தனது 58 ஆவது படத்தில நடிக்கும் விஜய் ஷூட்டிங் ஸ்போட் போவது ஒரு மோட்டார் பைக்கில் தானாம், அப்பொழுது அவர்  மோட்டார் பைக்கில்  போகும் புகைப்படத்தை யாரோ இணையத்தில் விட்டிருகிறார்கள் அது காட்டு தீ போல எல்லா இடமும் பரவலாக பேசப்பட்டது அனைவரும் அறிந்த விடயமே .
இதில முக்கியமான விடயம் என்றல் விஜய் தலை கவசம் (HELMET) அணியாமல் போனது நமது தலைக்கு (அஜித்) பிடிக்கவில்லை. ஆதலால் விஜய்க்கு அஜித் கூறிய அறிவுரை என்னவென்றால் "மோட்டார் பைக் ஓடுவது நல்லது தான் ஆனால் தலை கவசம் அணிந்து போகவேண்டியது கட்டாயம், ஆதலால் இனிமேல் தலை கவசம் அணியாமல் மோட்டார் பைக்கில் வெளியே செல்லாதீர்" என்று கூறினாராம் அஜித்..

இது எப்படியோ விஜய் காதுகளில் எட்டிவிட்டது, இதனை கேட்டு சந்தோசம் அடைந்த விஜய், தன் சக நடிகர் ஒருவர் தன்மீது இப்படி அக்கறை காட்டியுள்ளார் இதற்க்கு நன்றி தெரிவித்தே ஆக வேண்டும் என்று தன் நன்றியை தெரிவித்தார். அதாவது "என் மீது அக்கறை காட்டி நீங்கள் கூறிய அறிவுரைக்கு மிக்க நன்றி இனிமேல் தலை கவசம் அணியாமல் பைக் ஒட்டமாட்டேன், நீங்கள் இவ்வளவு அக்கறையோடு இருப்பதால் நானும் ஒன்று சொல்கிறேன் அதை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், உங்கள் படத்தோட பொது நிகழ்சிகளில் இனிமேல் கலந்து கொள்ளுங்கள், வெளியே செல்லுங்கள் அப்போதுதான் ரசிகர்களுக்கு தங்களை  சந்திக்கும் வாய்ப்பை அவர்களுக்கு நாம கொடுக்க முடியும்.
பொது, சினிமா நிகழ்வுகளிலும் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள், ரசிகர்கள் நம்மை  வாழ வைத்தவர்கள் அவர்களுக்காக நாம் இது கூட செய்யாவிடில் அது நாம் நம் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம். ரசிகர்களையும் ஒரு சக மனிதனாக, நண்பனாக, சகோதர/சகோதரியை பார்த்து பழகினோம் ஆனால் எல்லாருக்கும் நல்லது"
இப்படி தலைக்கு அறிவுரை கூறியிருக்கிறார் தளபதி

எது என்னவோ இவர்கள் போல் இவர்கள் ரசிகர்களும் நண்பர்களாக இருந்தால் எல்லாருக்கும் நல்லதே..

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top