புதுடெல்லி, டிச.3- 

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 2 நாட்களுக்கு முன்பு எண்ணெய் நிறுவனங்கள் 90 காசுகள் வரை குறைத்து அறிவித்தன. இந்த நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை 2 ரூபாய் 25 காசுகளும், டீசலுக்கான உற்பத்தி வரியை 1 ரூபாயும் உயர்த்தி நேற்று அறிவித்தது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும். 
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வு
அதே நேரம் நிதி பற்றாக்குறையை மத்திய அரசு கட்டுக்குள் வைக்கவும் இந்த நடவடிக்கை உதவி செய்யும். எனினும் உற்பத்தி வரி உயர்வு காரணமாக சில்லறையில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையில் எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

கடந்த 3 வாரங்களில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரியை உயர்த்தி இருப்பது இது 2-வது முறையாகும். கடந்த மாதம் 12-ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீது உற்பத்தி வரியை 1 ரூபாய் 50 காசுகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top